Pages

Wednesday, January 5, 2011

யாரும் வாழவில்லை!..

கொல்தன்மை அகற்றுவதற்காக கொல்லப்படுகின்ற
சந்ததிகள் குறித்த குறிப்புகளை
அறிவியலாளர்கள் சமர்ப்பிக்கிறார்கள்
கண்டடைவுகளை விதந்துரைக்கிறது
மானுடத்தின் தராசு முள்

மரபணுக்களில் எதிர்ப்பின் மூலகங்களை
அகற்றும் தொழிநுட்பம் கண்டறிந்தவருக்கு
அறிவிக்கப்படுகிறது
சமாதானத்திற்க்கான நோபல்.

நஞ்சைக் கொண்ட ஆட்டியின்
மகுடியில் வழிகின்றது நாள்
நாவை நீட்டியபடி ஆடுகிறது - நமது
ஓர்மத்தின் வால்

நஞ்சு நீக்கப்பட்ட காளான்களாய்
நலம் பேணி வளர்க்கப்பட்ட தீன் கோழிகளாய்,
மாமிசப் பிராணிகளாய் -
நாமும் இருக்கிறோம்
எதிர்ப்பின் சுவடுகள் இழந்து

குரல் என்பதொரு ஒலியாயிற்று
குருதி ஒரு திரவமாயிற்று
வேர் என்பதொரு பகுதியாயிற்று

ஒவ்வாமை, உணவுநஞ்சு
பயங்கரவாதம், பாசிசம், பிரிவினை
பல பெயர்கள் சொல்லி
பாதுகாப்பு பேணப்படுகிறது -

இருந்தும்..

யாரும் வாழவில்லை!

3 comments:

  1. //மரபணுக்களில் எதிர்ப்பின் மூலகங்களை
    அகற்றும் தொழிநுட்பம் கண்டறிந்தவருக்கு
    அறிவிக்கப்படுகிறது
    சமாதானத்திற்க்கான நோபல்//
    உண்மைதான். இப்போது இது தான் நடக்கின்றது. எதிப்பின் மூலங்கள் அழிக்கப்பட்டு தப்பித்தல் என்ற சமாளிப்புடன் அடிமைத்தனம்தான் விதைக்கப்படுகின்றது

    ReplyDelete
  2. //மரபணுக்களில் எதிர்ப்பின் மூலகங்களை
    அகற்றும் தொழிநுட்பம் கண்டறிந்தவருக்கு
    அறிவிக்கப்படுகிறது
    சமாதானத்திற்க்கான நோபல்//

    ReplyDelete
  3. அட நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க? நானே எப்பவாவதுதான் வருவேன் இங்க :-) நன்றி சுதனுக்கும் மயூவுக்கும்..

    ReplyDelete