Pages

Tuesday, June 9, 2009

ஊமை வாக்குமூலங்கள்!

சொல்லின் நிழலில் தூங்கும்
மௌனங்கள்
வெளியறத் தவிக்கும் தருணமொன்றில்

புரிதல் அற்ற பெருவெளியில்
புன்னகைகள் காய்ந்திருக்கும்
பொழுதொன்றில்

அவமானங்கள் வழிந்திருக்கும்
முகமதனை - விம்பமிட எந்த ஆடியும்
மறுக்கும் ஒரு கணத்தில்

சொல்லாமல் சேர்த்த சொல்லெல்லாம்
பூப்பெய்தி பின் புனிதங்கள்
கலைந்திருக்கும் காலமொன்றில்

ஒரு வார்த்தை தன்னை பேசிவிட துடிக்கிறது தயக்கங்களுடன்..

2 comments:

  1. வணக்கம் துர்க்கா

    “மௌனங்கள்
    வெளியறத் தவிக்கும் தருணமொன்றில்’’
    இந்தக் கவிதை வரிகளில் இந்த சொற்கள் ஏற்கும் பங்கிலும் மேலாக, ஒரு படைப்பாளியாக நீங்கள் பிடிவாதமாக இத்தனை காலம் காத்த மௌனத்துடன் தொடர்பு படுத்தியே இந்த வரிகளாஇ நான் பார்க்கிறேன்.

    மிக விசாலமான வாசிப்புப் பரப்பும், பார்வையும் கொண்ட உங்கள் போனறவரின் வருகை நிச்சயம் எழுத்துலகை இன்னும் விசாலமாக்கும்,


    வாருங்கள் துர்க்கா-தீபன்

    ReplyDelete
  2. ஆக்கங்கள் குறித்த உங்கள் ஊக்கங்கள் எப்போதும் எனக்கு உற்சாகம் அளிப்பதாகவே உள்ளது அருண்மொழிவர்மன். நன்றிகள்.

    //ஒரு படைப்பாளியாக நீங்கள் பிடிவாதமாக இத்தனை காலம் காத்த மௌனத்துடன் தொடர்பு படுத்தியே இந்த வரிகளை நான் பார்க்கிறேன். // அப்படியொன்றும்
    பிடிவாதமாக மௌனம் காக்கவில்லை இயல்பான சோம்பேறித்தனத்தையும் தயக்கங்களையும்தான் நீங்கள் இப்படி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்

    // மிக விசாலமான வாசிப்புப் பரப்பும், பார்வையும் கொண்ட உங்கள் போனறவரின் வருகை நிச்சயம் எழுத்துலகை இன்னும் விசாலமாக்கும் // மிகையாய் தோன்றுவதை இயல்பாய் விலக்கி ஏதேனும் என்னாலும் ஆகுமெனில் மகிழ்வே! நன்றி நண்பனே.

    ReplyDelete